போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
எண்பது, தொண்ணூறுகளில் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. தமிழில் தளபதி, பாட்டுக்கு ஒரு தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஷோபனா மலையாளத்தில் நடித்த மணிசித்திரதாழு படம் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு படம். அந்த படத்தில் அவரது நடிப்பும் குறிப்பாக கிளைமாக்ஸில் அவர் ஆடும் அந்த நடனமும் வெகு பிரசித்தம்.
அந்த படத்தில் கங்கா மற்றும் நாகவல்லி என்கிற கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஷோபனா நாகவல்லி கதாபாத்திரமாக மாறி 'ஒரு முறை வந்து பார்த்தாயா' என்கிற தமிழ் பாடலுக்கு கிளைமாக்ஸில் ஆவேசமாக நடனமாடி இருப்பார். தற்போது தான் நடத்தி வரும் நடன பயிற்சி பள்ளியில் தனது மாணவிகளுக்கு அந்த பாடலுக்கான நடனத்தை சொல்லித்தரும் ஷோபனா, அதுகுறித்தும் அந்த பாடல் படமாக்கப்பட்ட சமயத்தில் நடந்த விஷயங்கள் குறித்தும் ஒரு வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஷோபனா கூறும்போது, “அந்த பாடல் நவராத்திரி மண்டபத்தில் படமாக்கப்பட்டது. அதன் தரைத்தளம் முழுவதும் ஜொலிக்கும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெய் சேர்த்து துடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதில் துள்ளிக்குதித்து நடனமாடுவதற்கு எனக்கு பயமாக இருந்தது. வழுக்கி விழுந்து விடுவோமோ என்கிற அளவிற்கு தரை மிகவும் வழுவழுப்பாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல என்னுடன் ஆடிய ஸ்ரீதருக்கும் அந்த பயம் இருந்தது. இருந்தாலும் சமாளித்து ஆடினோம்” என்று கூறியுள்ளார்