புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு மொழிகளிலும் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என மாறி மாறி பணியாற்றி வருகிறார்கள். பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ஐதாராபாத்தில் மட்டும்தான் நடந்து வருகிறது.
பெரிய இடைவெளிக்குப் பிறகு, சமீப காலத்தில் தமிழ் இயக்குனர்கள் தெலுங்கு பக்கமும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் பக்கமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழிலிருந்து தெலுங்கிற்கு ஷங்கர், வெங்கட் பிரபு ஆகியோர் தற்போது சென்று படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் முன்பாகச் சென்ற லிங்குசாமி இயக்கத்தில் இரு மொழிப் படமாகத் தயாரான 'த வாரியர்' படம் தெலுங்கில் படுதோல்வி அடைந்தது. ஷங்கர், வெங்கட் பிரபு இயக்கி வரும் படங்கள் அடுத்த ஆண்டுதான் வெளியாகும்.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்துள்ள இயக்குனர்களில் கேவி அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' படம் கடந்த வாரம் வெளியானது. இதற்கு முன்பு 'டான், டாக்டர்' இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன் 'ப்ரின்ஸ்' படத்தில் எதிர்பாராத தோல்வியைப் பெற்றுள்ளார். எதற்கு இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார் என்றுதான் அவருடைய ரசிகர்களே கேள்வி கேட்கிறார்கள்.
தெலுங்கிலிருந்து அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' படமும், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படமும் வெளிவர உள்ளன. அவற்றிற்கு முன்னோட்டமாக தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கிய 'ப்ரின்ஸ்' தோல்வி அடைந்துள்ளதால் 'வாத்தி, வாரிசு' படங்கள் குறித்து தமிழ் ரசிகர்களுக்கு லேசான பயம் ஏற்பட்டுள்ளது. அந்த பயத்தை இரண்டு தெலுங்கு இயக்குனர்களும் போக்குவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.