மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் 'பொன்னியின் செல்வன்', கன்னடத்தில் 'காந்தாரா' ஆகிய இரண்டு படங்களும் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. இரண்டு படங்களுமே அந்தந்த மொழிகளில் வசூல் சாதனைகளைப் படைத்தது.
'பொன்னியின் செல்வன்' படம் வெளியான அன்றே பான் இந்தியா படமாக ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. ஹிந்தி, தெலுங்கு பாக்ஸ் ஆபீசில் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. தெலுங்கில் சுமார் 18 கோடியும், ஹிந்தியில் 23 கோடியும் மட்டுமே இதுவரையில் வசூலித்துள்ளது.
அதே சமயம், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹிந்தி, தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியான 'காந்தாரா' படம் தெலுங்கில் சுமார் 30 கோடியும், ஹிந்தியில் 31 கோடியும் வசூலித்துள்ளது. இந்த வசூல் தொகை 'பொன்னியின் செல்வன்' படத்தின் வசூலை விட அதிகம். தெலுங்கில் சுமார் 2 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்ட 'காந்தாரா' 15 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளது. தற்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.