பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ராஜா ராணி படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய் நடிப்பில் மூன்று படங்களை இயக்கிய அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கிறார்கள். இதையடுத்து மீண்டும் விஜய் உடன் இணைகிறார். விஜய் நடிக்கும் 68வது படத்தை இவர் இயக்குவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்த நேரத்தில் தற்போது ஜவான் படத்தை அடுத்து சல்மான்கான் நடிக்கும் ஒரு ஹிந்தி படத்தை அட்லீ இயக்கப்போவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், ஜவான் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆக, ஜவான் படத்தை அடுத்து அட்லீ, விஜய்யை இயக்குகிறாரா? அல்லது சல்மான்கானை இயக்குகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.