தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி | ராஷ்மிகாவின் 'மோதிர' ரகசியம்… | இந்தியன் 3 வருமா? வராதா? நாளை மறுநாள் தீர்வு கிடைக்குமா? | 7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் வெளிவந்த 'காந்தாரா சாப்டர் 1' படம் 850 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. காந்தாரா படத்தின் முன்கதையாக இந்த சாப்டர் 1 படம் வெளியானது. கடந்தவாரம் ஓடிடியிலும் வெளியான இப்படத்திற்கு அதிலும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் ரிஷப் ஷெட்டி அளித்த பேட்டியில், ‛‛காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை பணத்திற்காக எடுக்கவில்லை. நான் வேறு கதையைப் படமாக்கியிருந்தால் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேன். காந்தாராவை மக்கள் கலாசார வேறுபாடுகளைக் கடந்து அதிகம் பேசியபோது இதை நியாயத்துடன் முடிக்க வேண்டும் என நினைத்தேன். காந்தாராவின் முன்கதையை சொல்வதன்மூலம் அதற்கு நியாயம் சேர்க்க முடியும் என நம்பினேன். தெய்வீகத்தின் நம்பிக்கையால் இந்த படத்தை எடுத்தேன்'' என்றார்.