அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் மோகன்லால் மம்முட்டிக்கு அடுத்தபடியாக தற்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் நடிகர் திலீப். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் 'எம்புரான்' ரிலீஸ் ஆக, நாளை (ஏப்.,10) மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'பஷூக்கா' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த பரப்புரப்புகள் அடங்கிய பின்னர் நடிகர் திலீப் நடித்துள்ள 'பிரின்ஸ் அன்ட் பேமிலி' திரைப்படம் வரும் மே 9ம் தேதி சம்மர் விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. திலீப்பின் 150வது படம் இது என்பது ஹைலைட். தொடர்ந்து ஆக்சன் மற்றும் சீரியசான கதைக்களங்களில் நடித்து வந்த திலீப்பின் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது என்பது படத்தின் டைட்டிலை பார்த்தாலே தெரியும்.
இந்த படத்தில் திலீப்புக்கு அடுத்ததாக முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் தியான் சீனிவாசன் மற்றும் நடிகை ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். ஆச்சரியமாக இந்த படத்தில் திலீப்புக்கு ஜோடி இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை பின்ட்டோ ஸ்டீபன் என்பவர் இயக்கியுள்ளார். பிரித்விராஜ் நடிப்பில் கவனம் ஈர்த்த 'ஜனகணமன' படத்திற்கு கதை எழுதிய ஷரிஸ் முகமது தான் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் என்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. கடந்த சில நாட்களாக நடிகர் திலீப் சம்பந்தப்பட்ட பிரபல நடிகை கடத்தல் வழக்கு ஒன்று மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில் அதை ஓவர்கம் செய்து திலீப்புக்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.