துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த முக்கியமான படம் 'மருதநாட்டு இளவரசி'. இந்த படத்தில் அவர் வி.என்.ஜானகியோடு நடித்தார். இந்த படத்தில் நடிக்கும்போதுதான் இருவரும் காதல் கொண்டனர். அதனாலேயே இந்தப் படம் சினிமா வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது.
இந்த படத்தின் கதை, வசனத்தை கருணாநிதி எழுதினார், ஏ.காசிலிங்கம் இயக்கினார், எம்.எஸ்.ஞானமணி இசை அமைத்தார். படம் பெரிய வெற்றி பெற்றது.
1950ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் கதை என்னுடையது என்று 65 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2015ம் ஆண்டு பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி என்பவர் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து அவர் அப்போது கூறியதாவது: நானும், கருணாநிதியும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். நான் எழுதிய கதைகளை அவரிடம் காட்டி அவரது அபிப்ராயத்தை கேட்பது வழக்கம். அதன்படி 1949ம் ஆண்டு அவரிடம் ஒரு கதையை சொன்னேன். அந்த கதையை சில மாற்றங்களுடன் 'மருநாட்டு இளவரசியாக' மாற்றி விட்டார். படத்தில் இடம்பெற்ற பல வசனங்களும் நான் எழுதியதுதான். இது தொடர்பாக நான் அப்போதே கருணாநிதியோடு சண்டை போட்டேன்" என்றார்.
கருணாநிதி அரசியலில் பெரும் செல்வாக்கு பெற்றுவிட்ட சக்திமிக்க தலைவராக இருந்ததால் இந்த புகார் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.
புகார் கூறிய பி.கே.முத்துசாமி நாமக்கல்லை சேர்ந்தவர். "காவேரியின் கணவன்" படத்தில் இடம்பெற்ற "சின்ன நடை நடந்து வந்து" என்ற பாடல் உட்பட 60க்கும் மேற்பட்ட பாடல்களை முத்துசாமி எழுதியுள்ளார்.
நாடகத்திற்கு கதை, வசனம் எழுதிவந்த முத்துசாமி, 'தை பிறந்தால் வாழி பிறக்கும்' என்ற படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார். அவரது மனைவி இறந்த பிறகு, அவர் நாமக்கல்லில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். ஏழை எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு வழங்கிய மாதம் 1500 ரூபாய் பணத்தில் வாழ்க்கை நடத்தினார்.
முன்னாள் முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைப் புகழ்ந்து பல பாடல்களை பி.கே.முத்துசாமி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.