ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனார். இப்போது சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதில் வைபவ், அதுல்யா நடிக்கிறார்கள். ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நான் பேய் பேசுறேன் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் வைபவ். ஆனாலும், மணிகண்டன் பற்றி இந்த பட நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. ஆனால், நடிகர் ஜான் விஜய் மணிகண்டனை புகழ்ந்து தள்ளினார். அவர் சிறப்பாக நடிக்கிறார். அவர் சிஸ்டர் கஷ்டப்பட்டு நடித்து முன்னுக்கு வந்தார். மணிகண்டனும் அப்படி வருவார் என்றார்.
அடுத்த வாரம் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், தனது அண்ணன் பற்றி விரைவில் ஐஸ்வர்யா ராஜேசும் ஏதாவது பேசுவார். அண்ணனை பிரமோட் பண்ணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யாராஜேஷ் அப்பாவும் தெலுங்கில் நடிகர். அந்த வரிசையில் அவர் வீட்டில் இருந்து இன்னொரு நடிகர் வந்துள்ளார். மணிகண்டன் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சோபியாவும் லட்சுமி உள்ளிட்ட சில படங்களில், சின்னத்திரையில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.