தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு | கர்நாடகா சினிமா டிக்கெட் : நீதிமன்றம் இடைக்காலத் தடை |
கடந்த 2022ம் ஆண்டில் கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான படம் 'காந்தாரா'. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது அதன் முன்பகுதி கதையாக 'காந்தாரா சாப்டர்-1' என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. அவருடன் ருக்மணி வசந்த், ஜெயராம், சப்தமி கவுடா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிரைலர் காந்தாரா டிரைலரை போன்று பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் இந்த படத்தில் நாயகன் ரிஷப் ஷெட்டிக்கு நடிகர் மணிகண்டன் தமிழில் டப்பிங் கொடுத்திருக்கிறார். இவர் 'குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.