'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா |
எம்.ஜி.ஆர் நடித்த குமரிப் பெண், சிவாஜி நடித்த தங்கச்சுரங்கம், ரஜினி நடித்த குப்பத்து ராஜா, அர்ஜூன் நடித்த கல்யாண கச்சேரி மற்றும் சட்டம் சிரிக்கிறது உட்பட 15 படங்களை தமது ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர் ஈ.வி.ராஜன். பழம்பெரும் நடிகை ஈ.வி.சரோஜாவின் சகோதரர் மற்றும் பழம்பெரும் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் மைத்துனர். 83 வயதான ராஜன் சென்னை கொட்டிவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார்.
மறைந்த ராஜனுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் ராஜன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “தயாரிப்பாளர் ஈ.வி.ராஜன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. திறமையான பல கலைஞர்களை கண்டறிந்து அவர்கள் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சியவர். அவரது மறைவு கலைத்துறைக்கு பேரிழப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.