தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
புகழ்பெற்ற பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி. 1970களில் பிசியாக இருந்த ஏஞ்சலா 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1984 முதல் 1996ம் ஆண்டு வரை தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான 'மர்டர்: ஷி ரைட்' என்ற தொடர்களில் நடித்ததன் மூலம் உலக புகழ்பெற்றார். இந்த தொடர் 264 எபிசோட் ஒளிபரப்பப்பட்டது. ஒவ்வொரு எபிசோட்டுக்கும் 3 லட்சம் டாலர் அவர் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. 6 கோல்டன் குளோப், ஐந்து டோனி விருதுகள், வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார்.
97 வயதான ஏஞ்லா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.