டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

பிரபாஸ் நடித்துள்ள படம் ஆதி புருஷ். இந்த படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் தயாராகி உள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தை தழுவி உருவாகி வரும் இந்த படத்தில், ராமர் வேடத்தில் பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் கிராபிக்ஸ் பணிகள் மிகவும் மட்டமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்ததோடு ஹிந்து மத கடவுள்கள் அதன் தன்மைக்கு மாறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைதியே உருவான ராமரை கோபம் கொண்டவராகவும், அனுமனை கொடூர கொரில்லா குரங்காகவும் சித்தரித்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த படம் ஹிந்து மதத்துக்கு எதிராகவும் ஹிந்துக்களை புண்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதாக அயோத்தி ராமர் கோயில் தலைமை குரு சத்தியேந்திர தாஸ் கண்டனம் தெரிவித்தார். இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இந்நிலையில் படத்தில் நடித்துள்ள பிரபாஸ், தயாரிப்பாளர், இயக்குனர் ஓம் ராவத் ஆகியோருக்கு தேசிய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீசில் 'ஹிந்துக்களை புண்படுத்தி இந்த படம் உருவாகி இருப்பதாகவும் இதை கைவிட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




