புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கார்த்தி, ராஷி கண்ணா நடித்துள்ள சர்தார் படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 21ம் தேதி வெளிவருகிறது. இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இதனை இயக்கி உள்ளார். இது தொடர்பாக கார்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழில் உளவாளிகள் பற்றிய கதைகள், ஜேம்ஸ்பாண்ட் மாதிரியான படங்கள் அதிகமா வந்ததில்லை. கமல் சார் விக்ரம் மாதிரியான படங்கள் செய்திருக்கிறார். அதுவும் சர்வதேச உளவாளிகளின் கதை. நம்ம ஊர்ல ஒருத்தன் உளவாளியா இருந்தா எப்படி இருப்பான், அவன் செயல்பாடு எப்படி இருக்கும்? அப்படிங்கறதுதான் இந்தப் படம். உளவாளியா இருக்கிறவன் என்ன பண்றான், எந்த விஷயத்துக்காக அவர் உளவு வேலை பார்க்கிறான் என்பதுதான் இந்த படத்தின் ஹைலைட்.
இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கேர்டரில் நடித்திருக்கிறேன். நிறைய கெட்அப்கள் போட்டிருக்கிறேன். அப்பாவாக நடிக்கத்தான் மிகவும் சிரமப்பட்டேன். ஆயுத படை போலீஸ் என்பதுதான் நிஜ கேரக்டர் மற்றவை அந்த போலீஸ் போடுகிற வேஷங்கள்தான். என்றார் கார்த்தி.
பேட்டியின் போது பொன்னியின் செல்வனுக்கு பிறகு சம்பளத்தை உயர்த்தி விட்டீர்களாமே என்ற கேட்டதற்கு ”படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்த நான் தயார். ஆனால் யார் தருவார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் ஒழுங்காக வந்தாலே போதும். என்னை பொறுத்தவரை சம்பளத்தை பற்றி பெரியதாக கருதுவதில்லை. மக்களை மகிழ்விக்க வைக்கும் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதே. அண்ணன் மாதிரி வித்தியாசமான படங்களில் நடித்து விருதெல்லாம் வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதுமாதிரி படங்கள் எனக்க அமையவில்லை. ஜாலியான என்டர்டெயின்மென்ட் படங்கள்தான் அமைகிறது” என்றார்.