அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
வெங்கட் பிரபு டீமில் இருப்பவர் நிதின் சத்யா. கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிதின் சத்யா சென்னை 28 படத்தின் மூலம் எல்லோரும் அறிந்த நடிகர் ஆனார். அதன்பிறகு சத்தம் போடாதே, தோழா, சரோஜா, பந்தையம், ராமன் தேடிய சீதை, உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் தயாரிப்பாளராகி ஜருகண்டி, லாக்அப் படங்களை தயாரித்தார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் கொடுவா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கிறார்கள். பிக்பாஸ் சம்யுக்தா நாயகியாக நடிக்கிறார். ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பேச்சிலர் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
படம் பற்றி நிதின் சத்யா கூறியதாவது: இராமநாதபுரத்தை மய்யமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் எதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்பு பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை. இறால் மீன் கூட்டத்திற்குள் கொடுவா மீனை விட்டால் பயத்தில் இறால் மீண்கள் ஒன்றுக்கொன்று சண்டைபோட்டு செத்து விடும் என்பார்கள். அதுதான் இந்த படத்தின் மைய கரு. நான் இறால் பண்ணையில் வேலை செய்யும் சராசரி இளைஞனாக நடிக்கிறேன். ராமநாதபுரம் பகுதியில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். என்கிறார் நிதின்.