‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி |
தமிழில் மைனா, வேட்டை, தலைவா, தெய்வத்திருமகள், வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடால்அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். தொடர்ந்து ஜெய்ப்பூரை சேர்ந்த பிரபல பாடகரும் தனது நண்பருமான பவிந்தர் சிங்கை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை பவிந்தர்சிங் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கினார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருவரும் திருமணம் முடித்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் திருமணம் நடக்கவில்லை என்று அமலாபால் தரப்பில் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள வீட்டில் அமலா பாலுக்கு பவிந்தர் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பண மோசடி செய்ததாகவும் அமலா பால் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், பவிந்தர் சிங்கை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.