பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
மலையாள திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தாக்குதல் இருக்கிறது என கடந்த வருடம் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை உறுதி செய்தது. இதனை தொடர்ந்து சில பெண்கள் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை கூறி, சில நடிகர்கள், இயக்குனர் மீது புகார் கொடுத்தனர். அதுமட்டும் இன்றி ஹேமா கமிஷன் அறிக்கை அடிப்படையில் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. அந்த வகையில் மொத்தம் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 35 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக சமீபத்தில் காவல்துறை தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது.
ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் பெரிய மாற்றம் நிகழும் என எதிர்பார்த்த பலருக்கும் இது அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக கடந்த பல வருடங்களாகவே சினிமா பெண்கள் நல அமைப்பு மூலமாக மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நடிகை பார்வதி தனது ஏமாற்றத்தை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்த விசாரணை கமிஷன் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது, இப்போது இத்தனை வழக்குகளை முடித்துவிட்டு அரசு கொள்கை முடிவு எடுத்து அதன் மூலம் திரை உலகில் மாற்றத்தை கொண்டு வரும் என்றால் அது சாத்தியமா? ஏற்கனவே இந்த அறிக்கை வருவதற்கு ஐந்தரை வருடங்கள் ஆகிவிட்டது இந்த வேகம் போதுமா ? என்று கேரள அரசை கிண்டலடிக்கும் விதமாக கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் மலையாள திரையுலகில் பெண் இயக்குனரான விது வின்சென்ட் என்பவர் அரசுக்கு ஆதரவாகவும் நடிகை பார்வதி போன்று இந்த விஷயத்தில் எதிர்ப்புக் குரல் எழுப்புவோர்களுக்கு பதில் கொடுக்கும் விதமாகவும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் இது குறித்த புரிதல் இல்லாமல் பேசி வருகிறார்கள். ஹேமா கமிஷன் விசாரணையின் போது பல குற்றச்சாட்டுகளை கூறியவர்களும் அந்த அறிக்கை வெளியான பிறகு பல பேர் மீது புகார் கொடுக்க வந்தவர்களும் தொடர்ந்து தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை. மற்றும் வழக்கை தொடர்ந்து நீதிமன்றத்தில் சந்திக்க முன்வரவில்லை. அப்படி இருக்கும் நிலையில் அரசு எப்படி இந்த வழக்கை முன்னோக்கி எடுத்துச் சொல்ல முடியும். இந்த விஷயத்தில் காவல்துறையும் அரசு எடுத்துள்ள முடிவு முழுவதும் லாஜிக்காக, புரிந்து கொள்ளும்படியாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வழக்கை நடத்துவது சிரமம். அதனால் தான் அரசு கொள்கை ரீதியாக ஒரு முடிவை எடுப்பதாகவும் அது குறித்து ஆலோசிக்க திரைப்பட சங்கங்களுடன் கூட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இது சரியான நடைமுறை” என்று கூறியுள்ளார்.