டைட்டிலை வைத்து விட்டதால் வேறு வழியின்றி பவன் கல்யாணின் பெயரை மாற்றினேன் : ஓஜி இயக்குனர் சுஜித் | டார்க் மேக்கப்பில் நடித்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராதாரவி | பிளாஷ்பேக் : இப்படியும் நடந்திருக்கு | திட்டமிட்டபடி படத்தை முடித்தோம் : விஜய் மகன் ஜேசன் | மகன் படப்பிடிப்பை பார்க்க வந்த தந்தை மம்முட்டி | தமிழ் சினிமாவில் வெற்றி குறைய நடிகர்களின் தலையீடு தான் காரணம் : திருப்பூர் சுப்ரமணியம் | விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேசுக்கு வெற்றியை கொடுக்குமா ‛ரெளடி ஜனார்தனா' | அந்த நிஜ ஹீரோவை சந்திக்கணும் : இயக்குனர் தமிழ் விருப்பம் | சென்னை திரைப்பட விழாவில் விருது : தேசிய விருதை அள்ளுமா டூரிஸ்ட் பேமிலி |

தமிழில் சசி இயக்கிய 'பூ' என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. அதன் பிறகு தனுசுடன் 'மரியான்', கமலுடன் 'உத்தம வில்லன்', விக்ரமுடன் 'தங்கலான்' உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஊடகங்களில் அவர் சொல்லும் கருத்துக்கள் அவ்வப்போது மலையாள திரை உலகில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தனது கருத்துக்கள் சர்ச்சையாவது ஏன் என்பது குறித்து தற்போது ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார் பார்வதி. அதில், ''என்னை பொருத்தவரை என் மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுகிறேன். இப்படி நான் சொல்லும் கருத்துக்கள் தான் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதற்காக நான் உண்மையை மறைத்து பொய்யாக பேச ஒரு போதும் விரும்பியதில்லை. மற்றவர்களிடம் என்னை நல்லவராக காட்ட வேண்டும் என்பதற்காக நிஜத்தை மறைத்து போலியான முகமூடியை அணிந்து கொள்ள நான் தயாராக இல்லை. அந்த வகையில் நான் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாமலிருப்பதே என் மீதான விவாதங்களுக்கு காரணம்,'' என்று தெரிவித்திருக்கிறார் பார்வதி.