பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

இரவின் நிழல், டீன்ஸ் படங்களை இயக்கிய பார்த்திபன் அடுத்து 3 படங்களில் கவனம் செலுத்துகிறார். இது குறித்து அவரே பேசியுள்ளார். அவர் கூறுகையில், ''அடுத்து ஆண்டாள் என்ற படத்தை இயக்க உள்ளேன். ‛லப்பர் பந்து' சுவாசிகா ஹீரோயின். தலைப்பில் இருந்தே இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம் என தெரியும். டூரிஸ்ட் பேமிலி மாதிரி இது பக்கா குடும்பக்கதை.
அதற்கடுத்து ‛ஆடியன்ஸ்சும் ஆவுடையப்பனும்' என்ற விருது படத்தை இயக்க உள்ளேன். அந்த படத்தின் முயற்சியும், சிங்கிள் ஷாட்டும் பேசப்படும். விரைவில் என் மகன் ராக்கி இயக்குனர் ஆகப்போகிறார். அவன் படத்திலும் ஒரு ரோலில் நடிக்கிறேன். அதில் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது'' என்று கூறியுள்ளார்.
தவிர, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அர்ஜூன்தாஸை வைத்து படம் இயக்க முயற்சிக்கிறேன் என கூறியுள்ளார். ஆக, அடுத்து 3 படங்களில் பார்த்திபன் தீவிரமாக இருக்கிறார்.