பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்தவர், தற்போது தெலுங்கில் ஓகே ஓக ஜீவிதம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் கணம் என்கிற பெயரில் வெளியாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்க, நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..
இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்களது குடும்ப தயாரிப்பு நிறுவனம் என்பதால், நட்புக்காக நடிகர் கார்த்தி இந்த படத்தில் ஒரு பாடலைப் பாடி உள்ளதோடு குழந்தைகளுடன் சேர்ந்து அந்த பாடலிலும் பாடலிலும் நடித்துள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள ஷர்வானந்த் கார்த்தியை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்