ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
கடந்த ஆண்டில் மோகன்லால், பிரிதிவிராஜ் இணைந்து நடித்து நேரடியாக ஓடிடியில் வெளிவந்த படம் ' ப்ரோ டாடி'. தற்போது இந்த படத்தை தெலுங்கு ரீமேக்கை பங்கராஜூ பட இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படமாக நடிக்கவுள்ளார். இதில் த்ரிஷா, சித்து ஜோனலகட்டா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என தகவல் வெளியானது .
இந்த நிலையில் சித்து ஜோனலகட்டா ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு விலகிவிட்டாராம். இதைத் தொடர்ந்து இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஷர்வானந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். இந்த படத்தை சிரஞ்சீவி மகள் சுஷ்மிதா தயாரிப்பதாக கூறப்படுகிறது.