மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
தெலுங்கு நடிகரான சர்வானந்த், ‛எங்கேயும் எப்போதும்' போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர் தான். தற்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர். தமிழிலும் அவ்வப்போது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் வரலாற்று படத்தில் சர்வானந்த் நடிக்கிறார். இது அவரின் 38வது படமாக உருவாகிறது. பெங்கால் டைகர் படத்தை இயக்கிய சம்பத் நந்தி இப்படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகிய இருவரும் இணைந்துள்ளனர் என படக்குழு அறிவித்துள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.