லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
“எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, கணம்” ஆகிய தமிழ்ப் படங்களிலும் கதாநாயகனாக நடித்தவர் தெலுங்கு நடிகரான சர்வானந்த். அவருக்கும் ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தெலுங்கு முறைப்படி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. திருமணத்தில் சர்வானந்த்தின் சிறு வயது நண்பரும், நடிகருமான ராம் சரண் மற்றும் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டவர்களும் சில தெலுங்கு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
மணப்பெண் ரக்ஷிதா ரெட்டி ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சரான பொஜ்ஜல கோபால கிருஷ்ண ரெட்டி என்பவரின் பேத்தி தான் ரக்ஷிதா. இவரது அப்பா மதுசூதன் ரெட்டி உயர்நீதிமன்ற வக்கீலாக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற ஹால்டி, சங்கீத் நிகழ்வுகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. தற்போது திருமணப் புகைப்படங்களும் வெளிவந்துள்ளது. ஜுன் 9ம் தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.