Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சர்வானந்த்தை சமாளிக்க முடியாமல் திணறும் கிர்த்தி ஷெட்டி

02 ஜூன், 2024 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Krithi-Shetty-is-unable-to-cope-with-Sharwanand


தெலுங்கில் ‛உப்பென்னா' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கிர்த்தி ஷெட்டி. இதை தொடர்ந்து வாரியர், கஸ்டடி என தமிழ் இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்தாலும் அடுத்து ஒரு பெரிய வெற்றியை பெற முடியாமல் தவித்து வருகிறார். இந்த வருடம் தமிழிலேயே கார்த்தி, ஜெயம் ரவி, பிரதீப் ரங்கநாதன் ஆகியோரின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மலையாளத்திலும் டொவினோ தாமஸ் ஜோடியாக வரலாற்று படமாக உருவாகி வரும் ‛அஜயன்டே இரண்டாம் மோசனம்' என்கிற படத்திலும் நடித்துள்ளார் கிர்த்தி ஷெட்டி.


இந்த நிலையில் தெலுங்கில் அவர் நடித்துள்ள மனமே திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகனாக நடிகர் சர்வானந்த் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் சர்வானந்த், கிர்த்தி ஷெட்டி இருவரும் ஒரு குழந்தையின் பெற்றோராக நடித்துள்ளனர். குறிப்பாக சர்வானந்த் இந்த படத்தில் ஒரு குழந்தைத்தனம் கொண்ட அப்பாவாக நடித்துள்ளார். இதில் அம்மாவாக நடித்துள்ள கிர்த்தி ஷெட்டி குழந்தையை சமாளிப்பதை விட சர்வானந்த்தை சமாளிப்பதற்கு தான் மிகவும் சிரமப்படுகிறார் என்பதை டிரைலரில் உள்ள காட்சிகள் உணர்த்துகின்றன. முதன் முறையாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக கிர்த்தி ஷெட்டி நடித்திருப்பதால் இந்த படம் அவருக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை பாலியல் புகார் : இயக்குனருக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்நடிகை பாலியல் புகார் : இயக்குனருக்கு ... ‛தெலுங்கானா ஆந்தம்' உருவாக்கிய கீரவாணிக்கு கிளம்பிய எதிர்ப்பு ‛தெலுங்கானா ஆந்தம்' உருவாக்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)