இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அவர் இன்று பத்மபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பெறுகிறார். அதற்காக அஜித் தனது குடும்பத்தினருடன் டில்லி சென்றுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இன்று அஜித் பற்றி ஒரு சர்ச்சை வெளியாகியுள்ளது. அவருடன் 'காதல் கோட்டை, தொடரும்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த நடிகை ஹீரா, அஜித் பற்றி சொன்னதாக சில விஷயங்களை யாரோ சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஹீராவின் இணையதளம் என்று சொல்லப்படும் ஒரு தளத்தில் கடந்த ஜனவரி மாதம் யார் பெயரையும் குறிப்பிடாமல் சில வெளிப்படையான விஷயங்கள் பகிரப்பட்டுள்ளன.
அஜித் இன்று பத்மபூஷன் விருது பெறுவதையொட்டி, அதைப் பிடிக்காத விஜய் ரசிகர்கள் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அந்த இணையதளத்தைப் பலரும் பார்க்க முயற்சிப்பதால் அது தற்போது சரியாகச் செயல்படவில்லை. அந்த இணையதளம் உண்மையிலேயே ஹீராவுடையதுதானா, அதில் யார் பெயரையும் குறிப்பிடாமல் அவர் சொல்லியுள்ள விஷயங்கள் அஜித்தைப் பற்றியதுதானா என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை.