2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் |
ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 2023ல் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என அறிவிக்கப்பட்டு, தற்போது சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று ரஜினியை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகரும் 'வீர தீர சூரன்' படத்தின் மூலமாக தமிழில் வில்லன் நடிகராக அறிமுகமானவருமான சுராஜ் வெஞ்சாரமூடு ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இவர் மட்டுமல்ல கடந்த வாரம் இவரது நடிப்பில் வெளியான 'படக்கலம்' என்கிற படத்தின் குழுவினர் சிலரும் இவருடன் சென்று ரஜினிகாந்தை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய்பாபு தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டு 'இது எப்படி இருக்கு?' என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
படக்கலம் குழுவினருக்கும் ரஜினிகாந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே, எப்படி இந்த சந்திப்பு நிகழ்ந்தது என பலருக்கும் ஆச்சரியம் ஏற்படலாம். நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இந்த ஜெயிலர் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. அந்த வகையில் ரஜினிகாந்துடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள தனது 'படக்கலம்' படத்திற்கு வாழ்த்து பெறுவதற்காக படக்குழுவினரையும் அவர் அழைத்து சென்று ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.