மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படத்திற்குப் பிறகு சூர்யாவின் 46வது படமாக இப்படம் உருவாகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 'சூரரைப் போற்று' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் ஜிவி.
“லக்கி பாஸ்கர், வாத்தி' படங்களுக்குப் பிறகு எனது வெற்றிகரமான கூட்டணி இயக்குனர். சூர்யா 46 படத்திலும் ஆட்டம் போடுவோம் வெங்கி,” என இது குறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.
'வாத்தி, லக்கி பாஸ்கர்' இரண்டு படங்களிலும் ஜிவியின் பின்னணி இசையும், பாடல்களும் பேசப்பட்டது. சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படமும் இசைக்காகவும் பேசப்பட்ட ஒரு படம். அப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்றார் ஜிவி பிரகாஷ்.