ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், தயாரித்து நடித்துள்ள விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் நெகிழ்ந்து போன அவர் ‛‛நான் ஒருபோதும் இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை. எனக்கும், விக்ரமுக்கும் நீங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து விட்டது. நீங்கள் தந்த அன்பிற்கு கைமாறாக பதிலுக்கு நான் என்ன தரப் போகிறேன் என்று தெரியவில்லை. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த கமல் சாருக்கும், என்னுடைய மக்களுக்கும் எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன். லவ் யூ ஆல்'' என தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இதற்கு கமல்ஹாசன் ஒரு பதில் கொடுத்திருக்கிறார். அதில், ‛‛நீங்கள் செய்ய வேண்டியது ஒரே விஷயம், ஒருபோதும் மனநிறைவை அடையாமல் இருப்பதுதான். எப்போதும் நேர்மையாக உங்களது வேலையைச் செய்து கொண்டிருங்கள். அப்படி செய்தால் மக்கள் அதை நேசிப்பார்கள். உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ராஜ்கமல் பிலிம்சின் ஆதரவு எப்போதும் உண்டு'' என்று தெரிவித்துள்ளார்.