ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா. வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். நாடகங்களிலும் சாதனை படைத்தவர். அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் தொழில் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மோதல் இருந்தது. இதன் உச்சகட்டமாக எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா. அதன்பிறகு எம்.ஜி.ஆர் சரியாக பேச முடியாமல் தவித்தார். எம்.ஆர்.ராதாவுக்கு சிறை தண்டனை கிடைத்தது.
எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா, எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க போவதாக சொல்லி வந்தார். இப்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா மோதலை மையயமாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கக் போவதாகவும், எம்.ஆர்.ராதாவாக நடிக்க சரியான நடிகரை தேடிக் கொண்டிருப்பதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராதிகா தெரிவித்திருக்கிறார்.