ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி. ஆக்ஷன் படங்கள் மூலம் புகழ்பெற்றவர். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் மக்களின் சிறப்பு தூதராக இருக்கிறார். அதாவது போர் மற்றும் இயற்கை பேரழிவு காரணமாக புலம்பெயரும் மக்களின் நலன் குறித்து ஐ.நா.சபைக்கு தெரிவிக்கிறவர்.
கடந்த மாதம் போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி திரும்பி இருந்தார். இந்த நிலையில் போர் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் உக்ரைன் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள மக்கள், குழந்தைகளிடம் பேசி உற்சாகப்படுத்தினார். அங்குள்ள ரயில் நிலையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் பேசிய ஏஞ்சலினா, அவர்களிடம் போர் பாதித்த மக்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் பேசி புகைப்படம் எடுத்து அவற்றை ஏஞ்சலினா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது பயணம் குறித்து ஏஞ்சலினா கூறியிருப்பதாவது: உக்ரைன் மக்களின் அதிர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. குழந்தைகள் சந்திக்கும் வலியை நான் உணர்கிறேன். யாராவது அவர்களை தேற்றினால் அது அவர்களுக்கு மேம்பட்ட உணர்வை தரும். என்று கூறியிருக்கிறார்.
எதிர்பாராத விதமாக ஏஞ்சலினாவை சந்தித்த மக்கள் அவர் உண்மையிலேயே ஏஞ்சலினா தானா? என்று அவரிடமே கேட்டு அவரை ஆச்சர்யப்பட வைத்துள்ளனர். அதற்கு அவர்களிடம் நான் நடிகையாக வரவில்லை. உங்களின் தூதராக வந்திருக்கிறேன். என்றார்.