மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

இசையமைப்பாளராக உருவாக வேண்டுமென நினைத்து கதாநாயகியாக மாறியவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகை என்பதால் நடனம் மட்டும் கற்றுக் கொள்ளாமல் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்காக சண்டைக்கலையையும் கற்றுக்கொண்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். கடந்த வருடம் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த கிராக் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து சண்டைக்காட்சிகளில் ஆச்சரியப்படுத்தினார் ஸ்ருதிஹாசன்.
தற்போது கேஜிஎப் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸுடன் சலார் படத்தில் இணைந்து நடித்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு இந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகள் இருக்கின்றனவாம். இதற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றுள்ள ஸ்ருதிகாசன் இதுகுறித்து கூறும்போது, "பெண்களுக்கு சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே குறைவு தான்.. இதற்காக இயக்குனர்களை நான் குறை சொல்ல மாட்டேன். நிஜ நிலவரம் அப்படி இருக்கிறது. அதேசமயம் மற்ற யாரையும் விட உதைப்பதில் வல்லவர்கள் பெண்கள் தான். பெண் உதைப்பதை பார்க்கவே அழகாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.