காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

தான் கதாநாயகியாக நடித்த பிரேமம் என்கிற முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியவர் சாய்பல்லவி. தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இந்தநிலையில் இவரது தங்கை பூஜா கண்ணனும் தற்போது சித்திரை செவ்வானம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், தங்களது குழந்தை பருவ புகைப்படத்தை பகிர்ந்து தனது தங்கைக்கு வாழ்த்து கூறியுள்ளார் சாய்பல்லவி. அந்த வாழ்த்தில், “இது (இந்தப்படம்) உனக்கானது பூஜா. ஒரு கதாபாத்திரத்தில் நீ நடிக்கும்போது ரசிகர்கள் காட்டும் அன்பு என்பது மகிழ்ச்சி தரும் போதை. நீ இந்த பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்றும், உன்னை சுற்றி எப்போதும் நேர்மறை விஷயங்களே இருக்கும்படி உருவாக்கி கொண்டு, ஒவ்வொரு அனுபவத்தின் மூலம் சிறந்த மனிதராக ஆக வேண்டும் என்றும் நான் வேண்டிக் கொள்கிறேன். உயரமாக பற.. உன்னை பாதுகாக்க எப்போதும் நான் உடன் இருக்கிறேன்” என கூறியுள்ளார் சாய்பல்லவி.




