நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சினிமாவில் நடிக்க வந்து விட்ட பிறகு தங்களது முழு நேரத்தையும் திரையுலகில் தங்களது வளர்ச்சியை நோக்கியே கவனத்தை செலுத்தி வருவதால் பல நடிகைகளும் தங்களது திருமண வாழ்க்கையை பற்றி பெரிதாக யோசிப்பதில்லை. அதேசமயம் தங்களது உடன்பிறந்த இளைய சகோதரிகள் சகோதரர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் கடமையையும் சரியான நேரத்தில் செய்து விடுகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை சாய்பல்லவி, தனது தங்கை பூஜா கண்ணனின் திருமணத்தை சில தினங்களுக்கு முன் விமர்சையாக நடத்தி முடித்தார்.
அதேபோல மலையாள நடிகையான ஆஹானா கிருஷ்ணாவும் தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் சமீபத்தில் தனது தங்கை தியா கிருஷ்ணாவின் திருமணத்தை முன் நின்று விமர்சையாக நடத்தியுள்ளார். இவரது தந்தை கிருஷ்ண குமாரும் மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கிறார். தமிழில் மனிதன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மொத்தம் நான்கு மகள்கள். இதில் ஆஹானா கிருஷ்ணா தான் மூத்தவர்.
தனது தங்கையின் திருமணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திருமண நிகழ்வில் மணப்பெண்ணின் அக்காவாக இருப்பதே ஜாலியான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். நடிகைகள் என்று மட்டும் இல்லை, இங்கே தமிழில் சிம்பு, அதர்வா போன்ற ஹீரோக்கள் தாங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் தங்களது தம்பிகளின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.