Advertisement

சிறப்புச்செய்திகள்

மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு | ''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மற்ற மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டாதது ஏன் ? டொவினோ தாமஸின் அடடே விளக்கம்

08 செப், 2024 - 06:06 IST
எழுத்தின் அளவு:
Why-are-you-not-interested-in-acting-in-other-languages-Illustrated-by-Tovino-Thomas


மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோக்களின் பின்னால் அவர்களது நண்பராக பத்தோடு பதினொன்றாக நடித்து பின்னர் வில்லனாக, குணச்சித்திர நடிகராக என கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முன்னணி ஹீரோவாக தற்போது வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். தொடர்ந்து வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து வெற்றியை பெற்று வருவதுடன் ரசிகர்களின் கவனத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் நடித்துள்ள அஜயன்டே ரெண்டாம் மோசனம் என்கிற படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது.

மலையாள திரையுலகை சேர்ந்த துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்றவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் நிலையில் தனக்கு மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் மட்டுமே போதும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் டொவினோ தாமஸ். தமிழில் மாரி -2 என்கிற ஒரு படத்தில் மட்டுமே இவர் நடித்துள்ளார். மற்ற மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டாததற்கு அவர் கூறிய காரணம்தான் அடடே என ஆச்சரியப்பட வைக்கிறது

இதுபற்றி அவர் கூறும்போது, “ஹிந்தியில் அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் (சித்தார்த் நடித்தது) நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் இங்கே படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் அதில் நடிக்க இயலாமல் போனது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு மொழியிலும் அற்புதமான பல நடிகர்கள் இருக்கிறார்கள். அதனால் நாம் இன்னொரு மொழிக்கு சென்று அவர்களில் யாரோ ஒருவர் வாய்ப்பை தட்டிப் பறித்து நடிக்க வேண்டிய அவசியம் என எதுவும் இல்லை. அப்படியே மற்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் மும்பையில் அல்லது ஹைதராபாத்தில் வசிக்கும் ஒரு மலையாளி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மறுக்காமல் ஒப்புக்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே சமயத்தில் தங்கைகளுக்கு திருமணம் நடத்தி அழகு பார்த்த சாய்பல்லவி-ஆஹானா கிருஷ்ணாஒரே சமயத்தில் தங்கைகளுக்கு திருமணம் ... அமிதாப் பச்சன்-சல்மான் கானை ஓவர்டேக் செய்த விஜய் அமிதாப் பச்சன்-சல்மான் கானை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)