Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திடீரென வைரலாகும் சாய்பல்லவியின் பழைய சர்ச்சை பேச்சு வீடியோ: 'அமரன்' படத்துக்கு சிக்கல்?

29 அக், 2024 - 08:08 IST
எழுத்தின் அளவு:
Saipallavis-old-controversial-speech-video-suddenly-goes-viral:-Amaran-is-in-trouble


பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நாளை மறுநாள் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.


படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சாய்பல்லவியின் பழைய வீடியோவை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து, படத்திற்கு நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சாய்பல்லவி சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு பட புரமோஷனுக்காக நடந்த நேர்காணல் நிகழ்ச்சியின்போது பேசுகையில், ''காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை பார்த்தேன். அதில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டதை காட்டினார்கள். அதேபோல் நாட்டில் மாடு வைத்திருந்த இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறி சிலர் தாக்கி கொள்கின்றனர். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மதப்பற்றை வைத்து இன்னொருவரை துன்புறுத்தக் கூடாது அப்படித்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் ஆக பார்க்கின்றனர். இருதரப்புக்கும் இடையே இருக்கும் பார்வைகள் வேறுபடும். வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது. நாம் மனிதர்களாக இருக்க வேண்டும்; யாரையும் துன்புறுத்தக் கூடாது'' எனப் பேசியிருந்தார்.


இந்த விவகாரம் அப்போது பூதாகரமாக வெடித்தது. இதற்கு அப்போது பதிலளித்த சாய்பல்லவி, ''நான் சொன்ன கருத்து வேறு மாதிரி புரிந்து கொள்ளப்பட்டது'' என குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவை தற்போது திடீரென பகிர்ந்துவரும் நெட்டிசன்கள், சாய்பல்லவியை நிராகரிக்க வேண்டும், அமரன் படத்தை நிராகரிக்க வேண்டும் என டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் எக்ஸ் பக்கத்தில், #BoycottSaiPallavi என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

சாய்பல்லவியின் கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், இப்போது திடீரென பழைய வீடியோவை பரப்பி எதிர்ப்பு தெரிவிப்பது சரியில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமரன் பட ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தற்போது இந்த விவகாரத்தால் படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது இனிமேல்தான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
6:31 அப்டேட் இது தான் : விடாமுயற்சி ‛டப்பிங்' துவங்கியது6:31 அப்டேட் இது தான் : விடாமுயற்சி ... விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் தமிழக உரிமை விற்பனையானது! விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sathyasekaren Sathyanarayanana - Kulithalai,இந்தியா
30 அக், 2024 - 05:10 Report Abuse
Sathyasekaren Sathyanarayanana இந்த கூத்தாடியின் கேவலமான பேச்சு பழசாக இருந்தாலும் கண்டிக்கத்தக்கதே, இவரின் மீது இருந்த மதிப்பு போய்விட்டது. காஷ்மீரில் பல கொடுமைகளை இவர் பேசுவாரா? ஹிந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவை கொலைசெய்வதை மனிதர்களுடன் எப்படி ஒப்பீடு செய்யமுடியும்? இவரை பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டும்.
Rate this:
Muthukrishnan Srinivasan - Edinburgh,யுனைடெட் கிங்டம்
29 அக், 2024 - 04:10 Report Abuse
Muthukrishnan Srinivasan அமரன் படத்தில் இதே மாதிரி கருத்துடைய வசனம் உள்ளது. amaran trailer 1:28
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)