ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
அஜித் நடிப்பில் நீண்டகாலமாக தயாரிப்பாக உருவாகி வரும் படம் ‛விடாமுயற்சி'. மகிழ்திருமேனி இயக்க திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, லைகா தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க ஆக் ஷன் கதையில் தயாராகி உள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து, சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த படம் எப்போது ரிலீஸ் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. ஆரம்பத்தில் தீபாவளி என்றார்கள். ஆனால் படம் முடியவில்லை. பிறகு டிசம்பர் ரிலீஸ் என்பது போன்று தகவல் வந்தது. இப்போது பொங்கல் வெளியீடு என்கிறார்கள். ஆனால் அதுவும் உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில் அஜித்தின் மேலாளர் இன்று(அக்., 29) மாலை 5:30 மணியளவில் திடீரென மாலை 6:31 மணிக்கு விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகிறது என அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் டீசர் அல்லது ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாய் இருந்தனர். ஆனால் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் துவங்கியதாக அறிவித்துள்ளனர். படத்தின் முதல்நாள் டப்பிங்கில் ஆரவ் பங்கேற்று பேசி உள்ளார். அவருடன் மகிழ்திருமேனி, லைகா திருக்குமரன், அஜித்தின் மேலாளர் சுரேந்திரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.