அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் நடிப்பில் இம்மாதத் துவக்கத்தில் வெளிவந்த படம் 'விடாமுயற்சி'. சுமார் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தும் வியாபார ரீதியாக வெற்றிப் படமாக அமையாமல் போய்விட்டது. அஜித் ரசிகர்களையே கூட இப்படம் ஈர்க்கவில்லை என்பது அதிர்ச்சியாகவே அமைந்தது.
இருந்தாலும் ஓடிடியில் இப்படம் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 3ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் 'கன்டென்ட்' ஓடிடிக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
தியேட்டர்களில் வந்து பார்க்காத பலர் ஓடிடி தளத்தில் படத்தை விரும்பிப் பார்க்கலாம். படம் ஓடிடியில் வெளியான பின் அதன் டிரெண்டிங்கில் தனி சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது.