அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி திரைக்கு வந்த படம் விடாமுயற்சி. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே திரைக்கு வந்த இந்த படம் அஜித்தின் ரசிகர்களை கூட பெரிதாக திருப்திபடுத்தவில்லை. என்றாலும் திரைக்கு வந்து இரண்டு வாரங்களில் இப்படம் இதுவரை 150 கோடி வசூல் செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு வசூலித்தாலும் படம் லாபம் கணக்கில் சேரவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இன்னும் சில தினங்களில் தனுஷ் இயக்கி உள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் போன்ற படங்கள் திரைக்கு வருவதால் இதற்கு மேலும் விடாமுயற்சி தியேட்டர்களில் தாக்குப்பிடிப்பது கடினம் என்பதால் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தயாராகி விட்டார்களாம்.