2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் | ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! | கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் |
வசந்தபாலன் இயக்கி உள்ள படம் ஜெயில். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து, கதையின் நாயகனாக நடித்துள்ளார். அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், நந்தன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெளியாகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.
நகர்புறத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட குடிசை வாழ் மக்களை இந்த சமூகமும், அரசியலும் எப்படி வன்முறையாளர்களாக மாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் தற்போது தணிக்கை செய்யப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சில கட்டுகளுடன் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். அடுத்த மாதம் படம் வெளிவரும் என்று தெரிகிறது.