ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக நடிகர் அர்ஜூன் தாஸ் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
‛கைதி, மாஸ்டர்' படங்களில் நடித்த அர்ஜூன் தாஸ் தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛அநீதி'. நாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. கோவை அவினாசி சாலையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு வந்த அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் தாஸ், ‛‛அநீதி படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு நன்றி. வசந்தபாலன் இயக்கம், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பு, ஜி.வி.பிரகாஷ் இசை என பெரிய கூட்டணிக்கு கட்டாயம் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்த்தோம். இந்தநேரத்தில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு நன்றி சொல்கிறேன். புதிய பரிணாமத்தில் மாறுதலான கதாபாத்திரத்தில் தோன்றியது மகிழ்ச்சியே. மீண்டும் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளது'' என தெரிவித்தார்.