ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
'சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி' படங்களில் நடித்தவர் தமிழ் நடிகையான துஷாரா விஜயன், தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்', படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோஷுட் புகைப்படங்களைப் பதிவிடுபவர்களில் துஷாராவும் ஒருவர். ஆனால், இன்று அவர் பதிவிட்ட சில புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரத்தின் கடற்கரைப் பகுதியில் எடுக்கப்பட்ட அந்தப் பிகினி புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
இதுவரையில் துஷாரா பகிர்ந்த புகைப்படங்கள் இவ்வளவு கிளாமராக இருந்ததில்லை. பொதுவாக தமிழ் நடிகைகள் யாரும் இப்படி பிகினி புகைப்படங்களை வெளியிடவும் மாட்டார்கள். ஆனால், துஷாரா வெளியிட்டிருப்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.