ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் வாழை. இந்த படம் சிறுவர்களை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த மாரி செல்வராஜ் தற்போது தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
வாழை படத்தை தனது சிறு வயதில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ் . அதாவது, வாழைத்தார் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் நிறைய பேர் இறந்து போன சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. அந்த லாரியில் சிறுவயதில் மாரி செல்வராஜூம் பயணித்து உயிர் தப்பி இருக்கிறார். அந்த விபத்தில் அவரது சில உறவினர்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் வாழை படத்தை இருக்கியிருக்கிறாராம்.




