இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக நடித்து வரும் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரிசெல்வராஜ். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் எழுத்தாளரான மாரிசெல்வராஜ் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் மற்றும் மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு புத்தகங்களை எழுதி இருக்கிறார். அதையடுத்து தற்போது உச்சினியென்பது என்ற ஒரு கவிதை தொகுப்பையும் எழுதியுள்ளார் மாரி செல்வராஜ். இந்த தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார்.