விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
சிவா இயக்கத்தில் இமான் இசையில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த. இப்படம் உலகம் முழுவதும் நாளை 1190 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 600 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ஏரியா வாரியாக எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை, செங்கல்பட்டு ஏரியாக்களில் தலா எண்பது தியேட்டர்களுக்கு மேல் இப்படம் வெளியாகிறது. சேலம், மதுரை, ராமநாதபுரம் ஏரியாக்களில் 70 தியேட்டர்களிலும், தென்னார்க்காடு ஏரியாவில் 50க்கும் அதிகமான தியேட்டர்களிலும், வட ஆற்காடு ஏரியாவில் 40க்கும் அதிகமான தியேட்டர்களிலும் வெளியாகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவில் 30 தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னை ஏரியாவில் 30 தியேட்டர்களில் வெளியாகிறது.
அதிகபட்சமாக சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் நாளை மட்டும் 84 காட்சிகளில் அண்ணாத்த திரைப்படம் திரையிடப்படுகிறது. அனேகமாக அனைத்து காட்சிகளுமே ஹவுஸ் புல் ஆகிவிட்டது.