சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த 'அண்ணாத்த' படம் கடந்த வருட தீபாவளிக்கு வெளிவந்தது. இப்படம் டிவியில் முதல் முறையாக கடந்த வாரம் பொங்கலுன்று ஒளிபரப்பானது. படம் வெளியான சில வாரங்களிலேயே டிவியில் ஒளிபரப்பானதால் டிவி ரேட்டிங்கில் புதிய சாதனை படைத்து முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 'விஸ்வாசம், பிச்சைக்காரன்' ஆகிய படங்கள் பெற்ற டிஆர்பி ரேட்டிங்கை விட குறைவாகப் பெற்று 3ம் இடத்தையே 'அண்ணாத்த' படத்தால் பிடிக்க முடிந்துள்ளது. இப்படத்திற்கு 17.37 தடப் பதிவுகள் மட்டுமே கிடைத்துள்ளது. 18.14 தடப்பதிவுகளுடன் 'விஸ்வாசம்' முதலிடத்திலும், 17.69 தடப்பதிவுகளுடன் 'பிச்சைக்காரன்' இரண்டாமிடத்திலும் உள்ளது.
இருப்பினும் 16.96 தடப்பதிவுகளுடன் இருந்த 'சர்க்கார்', 16.76 தடப்பதிவுகளுடன் இருந்த 'சீமராஜா' ஆகிய படங்களை முந்தியுள்ளது 'அண்ணாத்த'.