விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் பிரபல மலையாள டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவருமான பாக்யலட்சுமியும் கலந்து கொண்டுள்ளார். இந்தநிலையில் பாக்யலட்சுமியின் முன்னாள் கணவர் ரமேஷ்குமார் காலமானார். இந்த தகவல் பிக்பாஸ் வீட்டிலிருந்த பாக்யலட்சுமிக்கு தெரிவிக்கப்பட்டது.
கன்பெஷன் அறைக்கு வரவழைக்கப்பட்ட பாக்யலட்சுமி இந்த செய்தியை கேட்டதும் சற்று நேரம் அமைதியாக இருந்தவர், கொஞ்ச நேரத்தில் கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்தார். தனது கணவருடனான சில நினைவுகளை பிக்பாஸிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதாக செல்ல விரும்புகிறீர்களா என அவரிடம் பிக்பாஸ் கேட்டார். அதற்கு, கணவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்து வந்துவிட்டதால், தற்போது அங்கே சென்றால் என்னவிதமான சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டுமோ தெரியவில்லை.. ஆனால் எனது மகன்கள் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். அதனால் அவர்களிடம் போனில் பேச ஏற்பாடு செய்து கொடுங்கள்” என கேட்டுக் கொண்டார்.
கன்பெஷன் அறையை விட்டு அழுதுகொண்டே வந்த பாக்யலட்சுமியை பார்த்து, சக போட்டியாளர்கள் அதிர்ந்து போனார்கள். விஷயம் அறிந்து அவருக்கு ஆறுதல் கூறினார்கள். அன்றிரவு வெளியே அமர்ந்தபடி சக போட்டியாளர்கள் இருவரிடம் பேசிய பாக்யலட்சுமி, தனது கணவருக்கு சிறுநீரக கோளாறு என்றும், தான் மாற்று சிறுநீரகம் தருவதாக கூறியும் ஈகோ காரணமாக மறுத்துவிட்டார் என்றும் கூறினார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக, அவரை பார்த்துவிட்டுத்தான் வந்ததாகவும், தனது மகன்களிடம் அவரை கவனித்து கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு வந்ததாகவும் கூறினார் பாக்யலட்சுமி.
இப்படிபட்ட சூழலில் இறுதிச்சடங்கிற்கு சென்றாலும் சங்கடம், போகாவிட்டாலும் தனது உறவினர் மற்றும் சோஷியல் மீடியாவிலும் தனை அவதூறாக பேசுவார்கள், ஆனால் போகத்தான் வேண்டும் என தனது மனக்குமுறலையும் வெளியிட்டார். அதற்கு சக போட்டியாளர்கள், நீங்கள் அங்கே போக தேவையில்லை என அவரை சமாதானப்படுத்தினார்கள்.. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலும், சென்னையில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.




