லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேஹா, ‛வாணி ராணி' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்ட அவர், பாக்கியலெட்சுமி தொடரில் 12ம் வகுப்பு படிக்கும் சிறுமியாக நடித்து வருகிறார். அண்மையில், அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த வீடியோவில் பிரிமியர் லீக் கிரிக்கெட் வீரர் பதிரனாவின் வீடியோவை ரொமாண்டிக் பாடலுடன் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பதிரனாவை நேஹா காதலிப்பதாக செய்திகள் பரவ ஆரம்பித்தது. இதுகுறித்து விளக்கமளித்த நேஹா 'ஒரு போட்டோ வெளியிட்டதுக்கு இப்படியா வதந்தி பரப்புவீங்க' என ரிப்ளை கொடுத்து அன்றே அது ஒரு வதந்தி என சொல்லியிருந்தார். மேலும் ‛சிரிக்கிறதா அழறதான்னு கூட தெரியல. வொர்ஸ்ட் பிஹேவியர்' என கடுப்பாகி பதில் கொடுத்துள்ளார்.