இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
பிரபல வீஜே மணிமேகலை திருமணத்திற்கு பின் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் தான் கம்பேக் கொடுத்தார். அந்த வகையில் அவர் மிகவும் பிரபலமடைந்த ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். நடந்து முடிந்த அனைத்து சீசன்களிலுமே கோமாளியாக கலந்து கொண்டு மக்களை என்டர்டெயின் செய்து வந்த மணிமேகலை இந்த சீசனின் தொடக்கத்தில் சில எபிசோடுகள் மட்டுமே பங்கேற்று பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சோகமடைந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி ப்ரோமோவில் மணிமேகலை எண்ட்ரி கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இம்முறை மணிமேகலை கோமாளியாக எண்ட்ரி கொடுக்காமல் ரக்ஷனுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குக் வித் கோமாளி சீசன் 4 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் க்ராண்ட் ஃபினாலேவை மணிமேகலை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.