‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் |

சின்னத்திரை பிரபலமான மணிமேகலை தமிழகத்தில் மிகப்பெரிய இன்ப்ளூயன்ஸராக மாறியிருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து பல சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு, யூ-டியூப் மற்றும் சோஷியல் மீடியாவிலும் இன்ப்ளூயன்ஸராக வளர்ந்துள்ளார். 3 வீடுகள், இரண்டு கார்கள், ஒரு சொகுசு பைக் என உல்லாசமாக வாழ்ந்து வரும் மணிகேலை தனக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தும் அதை பயன்படுத்திக் கொள்ள விருப்பமில்லை என ஓப்பனாக பேசியிருக்கிறார்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய மணிமேகலை, ''நான் மியூசிக் சேனலில் மட்டும் தான் தொகுப்பாளினியாக வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து ஆடிஷனில் கலந்து கொண்டேன். அதன்பிறகு மற்ற இரண்டு சேனல்களிலும் தானாக தான் வாய்ப்பு வந்தது. இது ஒருபுறமிருக்க எனக்கு சினிமாவிலுமே வாய்ப்புகள் வந்தது. ஆனால், எனக்கு சினிமாவில் போவதற்கு விருப்பமில்லை. நான் இப்படியே ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு சினிமா சரிப்பட்டு வராது.
எனக்கு நடிக்கவும் தெரியாது, சுத்தமாகவும் எனக்கு வராது. என் கணவருக்கு அந்த பீல்டில் ஆசை இருக்கிறது. இப்போது ஷார்ட் பிலிம்களில் நடித்து கொண்டிருக்கிறார். எனக்கு அந்த பீல்டில் சுத்தமாக விருப்பமில்லை. அதனால் நான் நடிக்கவில்லை'' என அதில் கூறியிருக்கிறார்.