பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று பாக்கியலெட்சுமி. இந்த தொடரின் கதாநாயகி சுசித்ராவுக்கு தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த தொடரின் முதல் சீசன் முடிவடைந்து விரைவில் இரண்டாவது சீசன் வர இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பாக்கியலெட்சுமி என்ற தலைப்புடன் புதிய சீரியலின் புரோமோ வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். சினிமாவில் ஏற்கனவே ஹிட்டான படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு வைக்கும் போது அதிக ரீச் கிடைக்கும். தற்போது அதே பாணியை கையாண்டுள்ள கலர்ஸ் தமிழ் சேனல், கன்னடத்திலிருந்து 2 சீரியல்களை ரீமேக் செய்கிறது. அதில் ஒரு தொடருக்கு தான் விஜய் டிவியில் ஏற்கனவே ஹிட்டான பாக்கியலெட்சுமி தொடரின் பெயரையே வைத்துள்ளது. ஹிட்டான சீரியல்களின் கதையை எடுத்து கொள்வது ஒரு டிரெண்ட் என்றால் ஹிட்டான சீரியல்களின் தலைப்பை எடுத்து கொள்வது தான் இப்போது டிரெண்ட் போல.