சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
ஆடி அசைந்து வரும் தேர் போல இவர் நடந்து வருவது அழகு என்றால், கார் மேக கூட்டம் போல கருங்கூந்தல் அழகு நீளுகிறது. கயல்கள் இரு விழிகளாக பார்ப்போர் கண்களை கவருகிறது என்றால் முழு நிலவு போல முகம் நம்மை சுண்டி இழுக்கிறது என இவரை பார்ப்பவர்கள் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். அப்படியிருக்கையில் தோழிகள் சும்மா இருப்பார்களா. ஆம் தோழிகளால் தான் நடிகையானேன் என்கிறார் சீரியல் நடிகை சுபா.
அவர் கூறியது: சென்னை முகப்பேர் பிறந்து வளர்ந்த இடம். எனக்கு 13 வயது இருக்கும் போதே அப்பா இறந்து விட அம்மா தான் என்னையும், சகோதரி, சகோதரனையும் படிக்க வைத்தார். எனக்கு எல்லாமே அம்மா தான். டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டு கொண்டே அவர் கொடுத்த ஊக்கத்தால் பி.டெக்., படித்து முடித்தேன். கல்லுாரி இறுதியாண்டு படிக்கும் போதே என் தோழியின் தோழி ஒருவர் என்னை கவனித்து இருக்கிறார். பேசாமல் அவளை (என்னை) மாடலிங் செய்ய சொல் என தோழியிடம் துாபம் போட்டிருக்கிறார். அப்படி தான் 2020 காலகட்டத்தில் காஸ்ட்யூம் நிறுவனம் ஒன்றுக்காக 'ரேம்ப்வாக்' செய்தேன். அதில் கிடைத்த பாராட்டு மாடலிங் துறையில் என்னை இறங்க வைத்தது. நான் இத்துறையில் இறங்கியது அம்மாவிற்கு விருப்பம் இல்லாவிட்டாலும், எனக்கு இருந்த ஈடுபாட்டை பார்த்து ஓ.கே., சொல்லி விட்டார்.
பிறகு ஜூவல்லரி நிறுவனத்துக்காக விளம்பர படங்களில் நடித்தேன். தொடர்ந்து பல விளம்பர பட வாய்ப்புகள் வந்தன. பார்க்க பக்கத்து வீட்டு பொண்ணை போல இருப்பதாக என் விளம்பர படங்களை கவனித்தவர்கள் சொல்லிய போது உற்சாகத்தை தந்தது. 'ஊடலும், காதலும்' என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பையும் விளம்பர படங்கள் பெற்று தந்தது. அந்த சீரியலை முடித்த கையுடன் தற்போது 'சக்திவேல்' என்ற டிவி சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்து வருகிறேன். கண்டிப்பாக வெள்ளித்திரை வாய்ப்பும் வரும் என்ற நம்பிக்கையுள்ளது.
பாசிடிவ் கேரக்டர்களை காட்டிலும் நெகடிவ் கேரக்டர்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. நெகடிவ் கேரக்டர்களை கண்டு கோபமுற்று யார் இந்த நடிகை என விசாரிக்கவும் செய்து விடுகின்றனர். அதுபோல சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ ஹீரோயினியாக தான் நடிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. மக்கள் மத்தியில் நன்றாக 'ரீச்' ஆகுமளவுக்கு கதைக்கு முக்கியமான திருப்பமளிக்க கூடிய சிறு கேரக்டர்கள் என்றால் கூட ஓ.கே., தான்.
அடிப்படையில் நான் ஜாலியான பொண்ணு. ஆனால் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் அப்படியிருக்க கூடாது என்ற பயமும் உள்ளது. மாடலிங், ஆக்டிங், சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும், மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது ஆசை.
கொஞ்சம் டயட், தினமும் ஒர்க்அவுட் இவை தான் என் 'பிட்னஸ்' ரகசியம். பிரியாணி கொடுத்தால் ஒரு பிடி பிடித்துவிடுவேன். சூட் இல்லாத நேரங்களில் தோழிகளுடன் நேரம் செலவிடுவேன். அருகிலுள்ள கோயில்களுக்கு சென்று விடுவேன். பாடல்கள் கேட்கவும் பிடிக்கும். மக்களிடம் எனக்கென்று ஒரு பெயர் இருக்க வேண்டும் என்பது ஆசை. அதை நோக்கி தான் பயணத்தை தொடர இருக்கிறேன் என்றவாறு விடைபெற்றார்.